Tuesday, May 29, 2007

திருதவத்துறை


எனது சொந்த ஊர் திருதவத்துறை. எங்கள் ஊரில் 2 சிவன் கோவில் உள்ளது, ஒன்று எங்கள் ஊரில் இருந்து 4 மைல் கல் தொலைவில் உள்ளது, அக்கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுமார் 3 முதல் 4 அடி உயர பச்சை மரகதக்கல்லால் ஆனது. இது ஆசிய கன்டத்திலேயே முதன்மையானது.

மற்றொன்று எங்கள் ஊரின் மையத்தில் உள்ளது இது சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சான்றோர் ௯றுவர். இந்த கோவிலின் உச்சத்தில் எப்பொழுதும் ஒரு சிகப்பு நிற கொடி பறக்கும். ஒரு முறை வடக்கை ஆண்ட ஒரு மன்னன் எங்கள் ஊர் பக்கமாக வந்த பொழுது அக்கோவிலை சுட்டிகாட்டி தனது அமைச்சரிடம் கேட்டறிந்தார். அவர் கேட்டதாவது, "லால்குடி" என்று, "லால்"- என்றால் சிகப்பு, "குடி"- என்றால் கொடியை குறிப்பது, அவரது வழக்கத்தில். அம்மன்னன் எங்களது ஊரை சில காலம் ஆண்டபொழுது இப்பெயர் அமைய பெற்றது.

சுமாராக 8 மைல்கல் சுற்றளவு கொண்ட, எங்கள் ஊரின் மக்கள் தொகை 10,000 -த்தை எட்டும். எங்கள் ஊரில் ஆண், பெண் என இரு பாலருக்கும் தனி தனியே மேல் நிலை பள்ளி உள்ளது, இவற்றின் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் கற்பிக்கின்றனர். தலா 1200 மாணவர், மாணவியர் கல்வி கற்கின்றனர். 5 உயர் நிலை பள்ளிகலும் (4 தமிழ் வழி,1 ஆங்கிலம்). 11 நடு நிலை பள்ளிகளும் உள்ளது (8 தமிழ், 3 ஆங்கிலம்).

மொத்தம் 50 இக்கும் மேற்பட்ட குளம் இருந்தது, இப்பொழுது சுமாராக 25-இக்கும் மேல் ஆக்கிறமிப்பு செய்துவிட்டனர். அவற்றில் ஒன்று, அரசியல் கட்சியினால் பகிறங்கமாக ஏலம் விட்டனர். அக்குளம் ஊரின் மையத்தில் 300 அடி சுற்றளவு கொண்டது.

ஊரின் மையத்தில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. இரு காவல்துறை அலுவலகங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று மகளிர் காவல் நிலையம்.

Monday, May 14, 2007

முதல் தோற்றம்

ஒருமுறை நான் மின்னனு அஞ்சல் மூலமாக எனது நண்பர் விஜயபாபு பூபதி அவர்களை தொடர்பு கொண்டபொழுது அவர் இந்த முகவரியை தந்தார்.


இந்த வலையில் எனது நூல்(ள்)களையும் இணைப்பதற்க்கு எனது நண்பரே தூண்டுகோளாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார்.