Sunday, May 15, 2011

மறக்க நினைக்கும் திருமணவாழ்க்கை

பிறச்சனை 2 :
குழந்தை பிறந்து வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, எனது மாமியர் குழந்தை அருகே வந்து சத்தமாக பேசினார் அதன்காரனமாக குழந்தை அழ ஆறம்பித்தது நான் அவறிடம் குழந்தை அறுகேவந்து சத்தமாக பேசவேண்டாம் என்றேன், சற்றுநேரம் கழித்து அவர் எண்ணை மரியதையில்லாமல் பெசினார், அதைஎண்ணால் ஏற்றுகொள்ளமுடியவில்லை நான் பதிலுக்கு என்ன பிறச்சனை எதற்காக சொன்னீங்க என்றேன், மரியாதை இல்லாமல் பேசவேண்டாம் என்றேன். அதை என்மனைவியிடமும் சொன்னேன் அவள் அதை அவரிடம் கேட்டாள். ஆனா அதை அவர் மறுத்தார்.

பிறச்சனை 3 :
சிறிது நாள் பிறகு எனது குழந்தையிடம் 'ஏன் அழுகிறாய் உனது அப்பாவ பிடிக்கவில்லையா' என்று சொன்னார். இது என்னை மேலும் வறுத்தபடவெய்த்தது. பிறகு அங்க இருக்க முடியாமல் பெங்களூர் திரும்பினேன், சென்னை செல்வதை தவிர்த்து வந்தேன், எனது மனைவி கேட்டதற்க்கு நடந்ததை சொன்னேன், அவள் இதை கேட்டதற்கு இதையும் இல்லை என்றார் அவள் அம்மா.

பிறச்சனை 4 :
தங்கம் விலையை பார்த்து பாக்யா திருமணத்திற்க்கு LIC பணத்தை தங்கம் வாங்கிவைக்கலாம் என்று எனது தந்தையிடம் சொன்னேன். அவறும் அதையேற்று வாங்கலாம் என்றார். இதை பிறகு சென்னை சென்ற பிறகு என் மனைவி LIC பணம் பற்றி விசாரித்தார் அதற்க்கு எனது திட்டம் பற்றிசொன்னேன் அதை அவள் ஏற்க்கமறுத்தாள் பிறகு அது பெரிய சண்டை ஆனது. பிறகு நான் பெங்களூர் திரும்பினேன். 2 நாள் பிறகு அவளிடம் பேசும் போது திரும்ப சண்டைஆனது அவள் நான் ஒன்றும் உங்கள் குடும்பத்திற்கு உதவிசெய்யவேண்டாம் என்று சொல்லவில்லை என்றாள், அதற்கு நான் அப்படி நீ சொன்னாளும் நான் கேட்கபோவது இல்லை, அப்படி ஒரு எண்ணம் இருந்தாள் நீ உனது அம்மா வீட்டிலேயே இருந்துவிடுயென்றேன்.

இதை அவள் அவள் அம்மாவிடம் சொன்னால், அவர் காலையிலேயே போன்செய்து சொன்னார், இவள் இறவுமுலுக்க தூங்கவில்லை நீங்க வெளிநாடு போவீங்கண்னு சொண்ணாங்க அதனாலதான் உங்களுக்கு பொண்ணு குடுத்தோம். உங்க அப்பா உங்க தங்கை திருமணத்திற்க்கு உங்களிடம் இருந்து பணம் எதிற்பாற்க்கமாட்டார் என்று நினைத்துதான் உங்களுக்கு பெண் கொடுத்தோம், உங்களுக்கு தெரியாம பெண் கொடுத்துவிட்டோம் என்றார். நான் பெண் பார்க்க சென்றப்பவே சொன்னேன் இந்த குடும்பம் வெண்டாம் என்று, ஆனால், யாரும் இதை ஏற்க்கவில்லை. நாள் செல்ல செல்ல அவள் குடும்பத்தைவிட்டு விலகி சென்றுகொண்டு இருக்கிறேன், என் மனைவியையும் சேர்த்துதான்.

இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம் எனது குட்டிமா.

நான் செய்த பாவம், இந்த திருமணவாழ்க்கை...

Saturday, May 14, 2011

குழந்தை குட்டிமா

எனது வாழ்வின் மறக்கமுடியாதநாள் எனது குட்டிமாவின் வருகை...

வாழ்கையில் எதிர்பார்த்த பிறச்சனை

எனது மனைவியின் வலைகாப்பு நிகழ்சியில் போது எனது மாமியார் எனது அம்மாவை அனைவரது முன்பும் தவறாக பேசினார் அதை என்னால் ஏற்றுகொள்ளமுடியவில்லை நான் அதை ஏதிர்த்து பேசினேன் எனது அப்பா என்னை சமாதானம் செய்தார், அதில் இருந்து ஆறம்பமானது பிறச்சனை.

பிறகு சென்னை சென்றபிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இருப்பினும் எனது மனைவிக்காக இருந்தேன், காரனம் அவள் வருத்தபடகூடாது என்பதற்காக. பிறகு அவரிடம் பேசுவதை தவிர்த்துவந்தேன். பிறகு நான் சமாதானம் அடைந்தேன்

Tuesday, December 9, 2008

திருமணவாழ்க்கை

என் மனைவியை நான் பெண்பார்க்க சென்றபோது நினைத்ததுபோன்று இல்லை. எனது குடும்பவாழ்க்கைக்கு ஏற்ற சிறந்த்த பெண் என பிறகு அறிந்தேன். அவளது சமையல் மிச்சிரப்பானது.

எங்கள் இருவருக்கும் ஒரு சிறிய மனக்குறைவு ஒன்று உண்டு அது வெளிநாட்டு பயணம், எனக்கு பிடிக்காத ஒன்று அது, காரணம் நான் எனது பெற்றோரை பிரிந்து வாழ விருப்பம் இல்லை. அது சிறிய பிரிவை இருப்பினும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது. ஒருமுறை நான் சென்னை சென்றபொழுது அவரது அம்மா கூட வற்புறுத்தினார், அவர் சொன்னது எனது நன்மைக்கே என்றாலும் விருப்பமில்லை.

திருமணம்

எனது திருமணம் பழனியில் நடந்தது. திருமணநாளில் எனது உறவினர் முத்துமாணிக்கம் வழக்கம்போல் சிறிய பிரச்சனை எழுப்பினார், இது அவரது வழக்கம், அவர் வீட்டு விழாக்களில் மட்டும் அமைதிகாப்பார்.

இருப்பினும் திருமணம் சிறப்பாய் நடந்தது...

பெண் பார்த்தல்

நான் முதலில் நேரடியாக பார்த்த பெண் என் மனைவி. முதலில் அவளை திருமணம் செய்ய தயங்கினேன் காரணம் அவளை பார்க்கும் முன் எனது உறவினர் பெரிய இடம் நல்ல குடும்பம் என்றனர். எனக்கு பெரிய இடத்தில் திருமணம் செய்ய விருப்பம் இல்லை காரணம் அவர்கள் விருப்பத்திற்கு நாம் மாற நேரிடும், இருப்பினும் உறவினர்களின் விருப்பத்தால் சம்மதம் தெருவித்தேன், மற்றும் சபரி அவளை பற்றி நல்ல விதமாய் தெருவித்ததாலும் பழனி மாமா விருப்பம் தெருவித்ததாலும், அவர் விருப்பம் எனக்கு சம்மதம் சொல்ல தூண்டியது எனவே சம்மதம் தெருவித்தேன்.
இருப்பினும் சிறிது காலம் அவளை நான் எனது நண்பராத்தன் பார்த்தேன், காலப்போக்கில் அதுவே காதலாய் மாறியது.

Friday, October 5, 2007

நிலாரசிகன் - கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...

(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)

பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்

நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...

எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!

எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!

எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!

கல்லூரித்தாயே!

உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.

உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..


கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....

இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!

அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!

என் ஜன்னல்த்தோழனே!

நலமா நீ?

எங்கே என் மரத்தோழன்?

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?

தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?

நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.

இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...


இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!

பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.

இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.

உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.

இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.

இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!


இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?

பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.

-தொடரும்....