Monday, September 17, 2007

குலதெய்வம் கோவில் கும்பாபிசேகம்

சென்ற மாதம் எங்கள் குலதெய்வம் கோவில் கும்பாபிசேகம், எங்களுக்கு இரண்டு குலதெய்வம் கோவில் உண்டு, ஒன்று வேடசந்தூர் திண்டுக்கலில் இருந்து 21 மைல் தொலைவில் உள்ளது, மற்றொன்று வேடசந்தூரில் இருந்து 11 மைல் கல் தொலைவில் உள்ளது. முறையே தேவி குங்குமகாளி அம்மன், தேவி பொட்டி அம்மன் என அழைக்கபெறும்.

எங்கள் பங்காளிகளில் அனுபவம்மிக்க, திறமைவாய்ந்த பெரியோர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடினோம், கோவில் சுமார் 1.75 கோடி செலவில் கட்டப்பட்டது. இவை எங்கள் பங்காளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது, மற்ற எவரிடமும் வசூல் செய்யவில்லை. எங்கள் கோவிலில் 800 தலைக்கட்டு உள்ளது தலைக்கட்டு என்றால் திருமணம் ஆன ஆண்கள், அவ்வறு அழைக்க பெருவர். கோவில் கும்பாபிசேகம் ஆகஷ்டு மாதம் முறையே 30, 31 தேதிகளில் நடைபெற்றது.

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

அன்னையர் பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். பதிவுக்கு நன்றி