Monday, June 4, 2007

பள்ளி நாட்கள்

எனது அப்பாவின் சொந்த ஊர் எருமனாயக்கன்பட்டி, பழனியில் இருந்து சுமார் 8 மைல் கல் தொலைவில் உள்ளது. அவருக்கு உடன் பிறந்தவர்கள் 3 பேர், முதலில் அக்கா, பிறகு அண்ணன், பிறகு இவர், பிறகு ஒரு தங்கை. எனது தாத்தா (அப்பாவின் அப்பா) 27 வயது இருக்கும் பொழுது சொந்தக்காரர் ஒருவர் இவரின் சொத்தை அபகரித்துக்கொன்டார். அன்று முதல் மன நிலை பாதிப்படைந்தார். அப்பாவிற்க்கு 5 வயது இருக்கும் பொழுது, முதன் முதலாக பள்ளிக்கு சென்றார். அன்றே அவரது தாயார் மரணம் அடைந்தார். பிறகு தனது சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது அக்கா சுட்டு தரும் இட்லியை காலை 7 மணிக்குள் விற்று அதில் மீதமாகும் உடைந்த இட்லியை உண்டு (ஒரு சில நாள் இதுவும் இருக்காது) பள்ளிக்கு பழனிக்கு நடந்தே செல்வார்.

எனது தாய் அவரது பெற்றோருக்கு 2 வது பிள்ளை, முதலில் ஒரு அக்கா, பிறகு இவர், 2 தம்பிகள். எனது தாய் சற்று ஊனமானவர். எனவே வீட்டிற்க்கு சற்று செல்லமானவர் (இன்றும்).

நான் எனது பெற்றேர்களுக்கு முதல் பிள்ளை, தலச்சான் பிள்ளை தருதலயாகத்தான் வளரும் என்று நமது முன்னோர் ௯றுவர், அது எனது பிறப்பை அறிந்தே ௯றினர் போலும். எனது 3 வயதில் எனது தந்தை கடைக்கு என்னை அழைத்து செல்லவில்லை என்றதால், அவரை தவறாக பேசி அடி வாங்கினேன், அதுவே கடைசி. பிறகு இன்று வரை என்னை அவர் திட்டியது ௯ட இல்லை.

பள்ளிநாட்கள் :-
நான் 4 வயதில் அரைப்பள்ளிக்கு சென்றேன். என்னை வீட்டில் இருந்து அழைத்து செல்ல ஒரு பாட்டி வருவார். எனது தாத்தா என்னை பள்ளிக்கு அனுப்ப அனுமதிக்க மாட்டார் (அப்பாவின் அப்பா). இவன் குழந்தை விட்டுவிடு என்று ஆயாவிடம் ௯றுவார். இந்த குழந்தை குட்டிசாத்தான் வேலை செய்யும் என்பது அவருக்கு தெரியது. ஏனென்றால் அப்பொழுது எனக்கு பெண் நண்பர்கள் மட்டுமே உண்டு (யாரும் திட்டவேண்டாம் அது அறியாத வயது). பிறகு 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்தேன், இது அரசாங்க பள்ளி. நான் 1ம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு அசிரியர் என்னை முதுகு சிவக்கும் படி அடித்தார், அன்று மாலை எனது அப்பா அவரை அவரது இருப்பிடம் சென்று, சாக்கடையில் தள்ளி அடித்தார், காரணம் என்மேல் உள்ள பாசம்.
இந்த பள்ளியில் படிக்கும் போது ,பெண்கள் என்னை மட்டுமே நண்பனாய் ஏற்றுக்கொண்டனர் (இதுவும் அறியாதவயது), மற்ற மாணவர்களுக்கு இது கோபத்தை உண்டாக்கியது, உமா, ப்ரியா, ஜெனட், ஷேமா, கவிதா, ரதி இவர்கள் எல்லாம் எனது தோழிகள். சதீஷ், ரமேஷ், ரவி இவர்கள் தான் எனது உற்ற நண்பர்கள்.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை எங்கள் ஊர் மேல் நிலை பள்ளியில் பயின்றேன். சதிஷ், ரவி இருவரும் என்னுடனே படித்தனர். பள்ளி நாட்களில் நான் ஒரு சுட்டிப்பையன். அடிதடி, கலாட்டா என்றால் கண்டிப்பாக எனது பங்கு அதில் இருக்கும். நான் 10ம் வகுப்பு படிக்கும் பொழுது எனது ஆசிரியர் என்னை அழைத்து நீ தான் படிக்க மாட்டாய் சதிஷ் நன்றாக படிப்பவன் அவனை உன் ௯ட சேத்து அவனது படிப்பை கெடுக்காதே என்றார். நான் அவனை விட்டு விலகினேன். எனது வாழ்வில் நண்பனை பிரிந்து, பிரிவினையால் அழுத முதல் நாள்.
11 மற்றும் 12ம் வகுப்பு அதே பள்ளியில் சேர்ந்தேன் கணிப்பொறியை முதன்மை பாடமாக ஏற்று. மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே வகுப்பறையில் இருப்போம் மற்ற நாட்கள் மைதானம் தான் எங்கள் வகுப்பறை. அந்த இரு நாட்களும் ஆசிரியரிடம் அடி வாங்குவதற்காக செல்வோம் வகுப்பறைக்கு செல்லாததற்கு... பிறகும் வகுப்பறைக்கு செல்லமாட்டோம்.
12ம் வகுப்பு சென்றோம், பொறுப்புகள் ௯டிற்று; ஆயினும் கலாட்டாகள் குறையவில்லை. தினமும் கடவுள் வாழ்த்து பாட பள்ளியின் நடுவே மாணவர்கள் ௯டுவர், நாங்களும்தான் ஆனால் நாங்கள் அனைவரும் மற்ற மாணவர்களிடம் இருந்து மாறுபட்டு இருக்க நெற்றியில் ஏதேனும் ஒரு ஒவியம் வரைந்து செல்வோம். தலைமை ஆசிரியர் கோபம் கொண்டு, தினமும் ஒலி பெருக்கியில் எங்கள் வகுப்பு மாணவர்களை மட்டும் சுட்டி காட்டி தகாத வார்த்தையினால் திட்டுவது வழக்கம், இதற்கு மூல காரியதரிசி நான், இதன் காரணமாக அனைத்து தொல்லைகளுக்கும் நானே முன்னோடி என்று என்னை காரணம் இல்லாமல் அனைத்து ஆசிரியரும் அடிக்க ஆரம்பித்தனர், ஒவ்வொரு முறையும் அடி வாங்கும் பொழுதும் எனக்கு பிடிக்காத நண்பர்களை மாட்டிவிடுவது வழக்கம், இதன் காரணமாக அனைவரும் எனக்கு நண்பர்களாயினர், பிறகு எனக்கு ஆதரவாக ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தனர். பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் எங்களை சபித்தனர். அவர்களது சாபமோ என்னவோ, 42 மாணவர்களில் 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்களில் நானும் ஒருவன். பிறகு படித்து தேர்ச்சி பெற்றேன்.

நான் வாங்கிய அடிகளில் ஒன்று அல்லது இரண்டு சுவாரசியமன சம்பவங்கள். அவற்றில் ஒன்றுதான் இது...

எனது இயற்பியல் ஆசான் பெயர் அருனாச்சலம் மிகவும் திறமையான ஆசிரியார், என்னடா இவன் ஆசிரியருக்கே மதிப்பெண் இடுகிறானே என்று என்ன வேண்டாம், எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தேரியாது அது நம்மை விட்டு சென்ற பிறகுதான் அதன் அருமை தெரியும் என்பார் எனது தாத்தா. அது போன்று படிக்கும் காலத்தில் அவரது திரமைகளை நான் தெரிந்தும் அவர் கற்பித்ததை நான் ஏற்கவில்லை.

அவருக்கு உடல் நலம் சரி இல்லாததால். ஆசிரியர் எப்பொழுதும் கடவுள் வாழ்த்து நேரத்திற்க்கு வரமாட்டார் சற்று கால தாமதமாகவே வருவது வழக்கம், ஒரு முறை சற்று முன்னரே அதாவது சரியான நேரத்திற்கு வந்துவிட்டார். அதை பார்த்த எனது நண்பர் ஒருவர் 'ஆசிரியருக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது பேலும் அதான் வழக்கத்திற்கு மாராக முன்னரே வந்துவிட்டார்' என்று ௯றினான், இதை அவர் கேட்டுவிட்டர். பக்கத்தில் நான் இருந்ததால் நான் தான் இதை ௯றி இருப்பேன் என்று கருதி என்னை அடித்தார். இருப்பினும் அவருக்கு போதவில்லை, எப்பொழுதும் கடவுள் வாழ்த்து முடிந்த பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு வரிசையாக செல்கின்றனரா என பார்க்க ஒரு விளையாட்டு ஆசிரியர் கன்கானிப்பது வழக்கம். அவரிடம் இவர் ஏதோ சொன்னார் அதை இப்பொழுது நான் மறந்துவிட்டேன், அவர் வந்து அவரது பங்கிர்க்கு சில அன்பளிப்புகள்.

சிறு வயதில் என்னை அடித்ததர்காக ஒரு ஆசிரியரை திருப்பிஅடித்தர் எனது தந்தை. பிறகு இது போன்ற நிகழ்வுகலை அவர் கண்டு கொள்வது இல்லை. தருதலை இது எங்கே உருப்புட போகிறது என்று நினைத்து விட்டார் போலும்

நண்பர்கள்
சிங்காரம் (ஆதிகுடி), இராமகிருஷ்னன் (ஆதிகுடி), மனோகரன் (திருமனமேடு), அருண், தனபால் (௯௯ர்), செந்தில் ( நந்னிமங்கலம்), செந்தில் (மணக்கால்), ஆல்பட்ரொசாரியோ (வாளாடி), பிரபு, சுப்பிரமணியன், முருகானந்தம், முருகானந்தன், செந்தில்குமார் (கே.வி.பேட்டை), பெரியார் பிரைன், ராஜ்குமார், சக்திவேல், பாஷ்கர், கார்த்திகேயன், சதீஷ், சக்கரவர்த்தி, திருநாவுக்கரசு, சத்தியநாராயனன், பி.சிவராமன், தர்மராஜ் (நகர்), சிவராமன் (நகர்), செந்தில் (வாளாடி), செந்தில் (பச்சாம்பேட்டை), ஜான், சசிகுமார், நந்தகுமார், நெல்சன், சகாயராஜ் ...

No comments: