Monday, June 4, 2007

கல்லூரி (இளம்கலை பட்டதாரி)

கல்லூரி என்றால் மனமகிழ் மன்றம் போல் சினிமாவில் சித்தரிப்பர். அதே எண்ணத்தோடு தான் நானும் எனது கல்லூரி வாழ்வில் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நண்பர் யாரும் இல்லை. காலப்போக்கில் நானும் ஒரு நண்பர்கள் வட்டாரத்தில் நுழைந்தேன். முதலாவதாக செல்வா, கணேஷ், விஜயபாபு, துளசிராமன், ராஜேஷ், பாலா.

கல்லூரியில் படிக்கும் பொழுது எனக்கு பெண் நண்பர்கள் கிடையாது காரணம் நான் பெண் நண்பர்களை ஏற்க்காமல் அல்ல, எந்த பெண்ணும் என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

ஒவ்வொறு பரிட்சை கால கட்டத்திலும் செல்வா, விஜயபாபு தான் எங்கள் அனைவருக்கும் சொல்லி கொடுப்பர். அதிலும் நான் அவர்களுக்கு அதிகம் தொல்லை தருபவன். மீண்டும் மீண்டும் கேட்க, சொல்லும் பொழுது திட்டுவர், இருப்பினும் சொல்லித்தருவர். 3 அல்லது 4 முறை சொன்னாலும் என்னால் நினைவில் கொல்ல முடியாது. அதன் காரனமாக 'பிட்' அடிக்க அரம்பித்தேன். முதல் முறையாக அடிக்கும் பொழுது சற்று பயமாக இருந்தது, பிறகு பழகிற்று. அதிலும் பல உத்திகளை கையாண்டேன்.

'பிட்' என்றால் ஒருசில கேள்விகள் மட்டுமே கொண்டுசெல்வர். நான் சற்று மாறுபட்டு 5 பாடத்தையும், அனைத்து கேள்விகளையும் கொண்டு செல்வேன்.

கணக்கு பாடத்தில் மட்டும் சற்று ஆர்வம் அதிகம்; அதன் காரணமக முறையே 96 & 98 மதிப்பெண் பெற்றேன். மற்ற பாடங்கள் எல்லாம் காப்பிதான். இறுதியாக இளநிலை பட்டம் பெற்றேன். அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்பறித்தோம். நான் மனதில் முறையே விஜயபாபு, செல்வா -க்கு நன்றி ௯றினேன். இது அவர்கள், இவற்றை படிக்கும் பொழுது என்மீது அன்பு கொள்வதற்க்காக அல்ல... இது உண்மை; அனைவரும் அறிந்தது. அவர்களுக்கு மட்டும் அல்ல நண்பர்கள் அனைவருக்கும்.

No comments: