Friday, June 8, 2007

சென்னை

நான் படிக்கும் காலத்தில் தரமான மேல் சட்டை, கால் சட்டை எதுவும் வாங்கியது இல்லை. சுந்தரிடம் பழகிய பின்புதான் வாங்கினேன். மாதம் ஒரு முறையேனும் அசைவம் உண்ண, புது ஆடைகள் வாங்க செல்வோம். நான் வேலைக்கு சேர்ந்த பின்பும் சுந்தர் எனக்கு நிறைய செலவு செய்தது உண்டு, முக்கியமாக அசைவ உணவு உண்ண செல்லும் பொழுது என்னை கட்டாயம் அழைத்து செல்வார்.

யோகேஷ் ராம்கோவில் வேலைக்கு சேர்ந்த பின்பு எங்களிடம் அவ்வாறாக நேரம் செலவிடவில்லை, காரணம் வேலை பழு அதிகம் என்பதால். எங்களை கண்டு பொறாமை கொள்வது உண்டு, அதை விட அதிகம் சந்தோஷம் கொள்வான், இன்றும் கல்லூரி வாழ்க்கை போல் சந்தொஷமாய் ஊர் சுற்றுவதை பார்த்து.

என்றாவது ஒரு நாள் நாங்கள் புகைபிடிப்பது என முடிவெடுத்து நான் தங்கராஜா வடிகட்டி புகையிலை வாங்கிவர சொல்வேன், நான் செல்வதர்க்கு காரணம் என் மேல் நல்ல அபிப்பராயம் யாரிடமும் கிடையாது, மற்ற வர்களுக்கு அப்படி இல்லை. மணி 11 ஆன பின்பு நான், சுந்தர், யோகேஷ் சிகரெட்டை எடுத்துகொண்டு குளியல் அறைக்கு செல்வோம், நான் உடனே பற்ற வைத்து ஆரம்பித்துவிடுவேன். யோகேஷ், சுந்தரும் மற்றவர்கள் வருகிறார்களா (முக்கியமாக கணபதி அண்ணன்) என பார்பதிலேயே நேரத்தை வீனடிப்பர். நான் அடித்து முடுத்தவுடன் அறையில் வந்து படுத்துவிடுவேன். கணபதி அண்ணன் அப்பொழுதுதான் வருவார்; இருவரும் பார்த்துவிட்டால் தப்பித்தனர், இல்லாமல் சுந்தர் மட்டும் பார்த்தால் தொலைந்தான் யோகேஷ் காரணம், சுந்தர் உடனே வாயை கழுவி விட்டு நேரே கணபதி அண்ணனிடம் வந்து யோகேஷ் தம் அடிக்கிரான் வந்துபாருங்கள் என்று அழைத்து சென்று காண்பித்துவிடுவான், அவன் இவரை பார்த்தவுடன் பேந்த பேந்த முளிப்பான். நான் திடீரென வந்து "என்னடா செய்கிராய், எவ்வளவு நாளாக இது" என்று ௯றி விட்டு சென்று விடுவேன். நடந்த நிகழ்வுக்கு முக்கிய காரணகத்தவே நான் தான், ஆனால் ஒன்றும் தெறியாதது போன்று இருந்து விடுவேன். நான் ஏற்க்கனவே சொல்லி இருக்கேன், எனக்கும் சுந்தருக்கும் யோகேஷ் தான் பலிகடா.

சென்னையில் நாங்கள் தங்கிய விடுதியில், எங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஒவ்வொரு வார ஞாயிற்று கிழமையும் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் தரும் நாள். காலையில் 7 மணி அளவில் யாராவது ஒருவர் எழுந்து 1 மணி நேரமாக மற்றவரை எழுப்புவோம். மணி 8 ஆன பின்பு ஒவ்வொருவராக காலைகடனை முடிக்க செல்வோம்; பிறகு டீ குடிக்க செல்வோம் என்று முடிவெடுத்து சென்று கையில் அகப்படும் தின்பன்டங்கலையெல்லாம் ஒருபுடி புடிபோம் ( நாங்கள் பொங்கல் பொடுவதற்காகவே யோகேஷ்யை அழைத்து செல்வோம்) முடிவில் யோகேஷ் தான் பணம் செலுத்துவான்.

இது முடியவே மணி 9:30 ஆகிவிடும் அப்புறம் எங்கே காலை உணவு, நேரே விடுதிக்கு சென்று 2 மணி நேரம் ஒரு கலாட்டா, இதற்கு நண்பர் சுந்தர் தான் தலைமை வகிப்பார். விடுதியில் வேலைசெய்யும் மாஷ்டர், நண்பர் உமா இவர்கள் தான் அடிக்கடி மாட்டுவர். பிறகு 12 மணிக்கு எங்கள் அறைக்கு சென்று ஆடைகளை துவைப்பது என முடிவு எடுப்பார் நண்பர் யோகேஷ்ம், ஈஷ்வரும். துவைப்பதர்க்குள் பெறிய கலாட்டாவே நடக்கும். ஒருவழியாக எல்லாம் முடிய மணி 3 ஆகிவிடும் பிறகு மதிய உணவு உண்ண செல்வோம் அங்கே அதற்குள் காய்கறி எல்லாம் முடிந்துவிடும் ஒரே ஒரு ௯ட்டு மட்டுமே வைப்பார்கள், சுந்தருக்கு கோபம் வரும் 'முன்னரே சொன்னேன் சீக்கிரம் கிலம்பலாம் என்று கேட்டீர்களா' என்று ௯றி திட்டுவான், இங்கும் யோகேஷ் தான் திட்டுவாங்குவது வழக்கம்.

வாழ்வில் முன்னேர தர்ப்பொழுது இருக்கும் வேலை சாதகமாய் இருக்கது என்பதால் வேரு வேலை தேட ஆரம்பித்தோம். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்ததால் நான் அவர்களை பிரிய நேர்ந்தது இது என்னை வறுத்தத்தில் ஆழ்த்தியது, ஆயினும் எதிர்காலத்தை மனதில் கொண்டு சென்னை விட்டு கிலம்பினேன்; இது தற்காலிகம் என்பதால் ஒரு ஆனந்தம்.

சச்சீனா நான் பெங்களூரில் சேர்ந்த மென்பொருள் தொழிலகம். பெங்களூர் வந்த நான் நண்பர் செல்வாவை தொடர்பு கொண்டு தற்காலிகமாக தங்குவதற்க்கு உதவி நாடினேன், அவருடன் நண்பர் ஜகதீஷ்ம் தங்கி இருந்தார். செல்வா என்னை நிரந்தர மாக தங்க ௯றினார். சந்தோசமாக அங்கே தங்கினேன், பழைய நண்பர்களுடன் இனைந்தால் சந்தோஷத்திற்க்கு சொல்லவா வேண்டும். அங்கே எனது பழைய நண்பர் ராஜேஷ் இருந்தார் முதல் மாடியில் குடும்பத்துடன். கல்லூரியில் படிக்கும் பொழுது கருத்து வேருபாட்டின் காரணமாக பிரிந்தோம்.

சென்னை நண்பர்கள், அவைகளுடன் இருந்த நாட்களை நினைத்து பார்த்து மகிழ்வதுண்டு; பசுமையான நாட்கள் சதோஷமான தருணங்கள்.

No comments: