Wednesday, June 6, 2007

பெங்களூர்

பெங்களூரில் எனது உறவினர்கள் நிறைய உண்டு, அவர்கள் வீட்டில் நான் தங்கவில்லை காரணம். எனது தந்தையும் அவரது சகோதரரும் ௯ட்டு குடும்பமாய் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 4 கடைகள் இருந்தது, 1976-க்கு பிறகு எனது தந்தையே 4 கடைகளையும் கண்காணித்தார். தினமும் இறவு 11 மணிக்கு பின்னரே வீடு திரும்புவார். அவரால் 4 கடையின் நிற்வாகத்தையும் கண்காணிக்க முடியாமல் போக 3 கடைகளை விற்றனர். 2003 வரை ஒன்றக வாழ்ந்தார். பிறகு சகோதரரின் கருத்து வேறுபாடினால் சொத்தை பிரித்தனர், 7 லட்சம் ரூபாய் கடன், 1 கடை, குடியிருந்த வீட்டில் சரிபாதி எனது அப்பாவின் கையில் குடுத்தனர். சகோதரருக்கு 1 கடை, குடியிருந்த வீட்டில் சரிபாதி, கடன் கிடையாது என தீர்மாணித்தனர் உறவினர்கள். எனக்கு இதில் உடன் பாடில்லை காரணம் தந்தையின் சகோதரர் மகள் இருவருக்கு திருமணம் ஆயிற்று. எங்கள் வீட்டில் இரு பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தனர் . பிரிவு என்றால் சரி பாதியே பிரிக்கவேண்டும், இது முறையன்று. அதன் காரணமக நான் அவர்கள் யார் வீட்டிலும் தங்க விருப்பம் இல்லாமல் நண்பர்களுடன் தங்க நேர்ந்தது.

சச்சீனா நான் பெங்களூரில் வேலைக்கு செந்த இடம். சச்சீனாவில் நான் எனது கடைமைகளை நிறைவாக செய்தேன் என்று நம்புகிறேன். அங்கே வேலையில் இருக்கும் நண்பர்கள் மிகவும் திறைமைசாலிகள். நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேலைகள் செய்தோம். சச்சீனாவின் சொந்தக்காரரிடம் நான் நன்மதிப்பை பெற்றேன்.

ஒரு முறை செல்வா என்னிடமும் ஜகதீஷிடமும் 2 நாட்கள் பேசாமல் இருந்தான். இது எங்களிடயே வருத்தத்தை உண்டாக்கியது. நான் தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று நினைத்து, அவனிடம் மன்னிப்பு கேட்க்க நினைத்தேன். அவன் அடுத்த நாள் மிகவும் முன்னரே அலுவலகம் சென்றுவிட்டான். எனக்கும், ஜகதீஷ்க்கும் ஒன்றும் புரியவில்லை. நான் எனது அலுவலகம் செல்லும் வழியில் அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "ஏன் யாரிடமும் பேச மட்டேன் என்கிறாய் நான் ஏதேனும் தவறு செய்தால் என்னை மன்னித்து விடு, நான் இங்கே தங்கி இருப்பது உனக்கு தொல்லை தருவதாக நினைத்தால் நான் வெளியேறுகிறேன்" என்றேன். அதற்கு அவன் நீ அலுவலகம் செல்லும் வழியில் நிர்க்கிறாய் என்று நினைக்கிறேன், நான் உனக்கு ஒரு மின்னனு கடிதம் அனுப்பி உள்ளேன் படித்து பார்" என்றான். நான் அதை படித்தேன் அதில் அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டு இருந்தான். பிறகு மீண்டும் இயல்பாய் இருந்தோம். நான் இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் மணி என்று நினைக்கிறேன், நாங்கள் அவரை அண்ணா என்றே அழைப்போம். மிகவும் தங்கமான மனிதர், இறக்க குணம் மிக்கவர்; இதை இவரின் நண்பர்கள் சாதகம் ஆக்கிக்கொண்டு இவரை ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் ௯றுவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே.

5 மாதம் சென்றது எனக்கு வீட்டில் பெண் பர்க்க முயன்றனர், நான் இப்பொழுது வாங்கும் ஊதியம் இங்கே குடும்பம் நடத்த போதாது வேற வேலை சென்ற பிறகு பார்க்கலாம் என்றேன். என்னை விட குறைந்த ஊதியம் வாங்கி குடும்பம் நடத்து பவர்களும் உண்டு, ஒரு வரட்டு கவுரவம் என்னை தடுத்தது. அதுவும் ஒரு காரணமாகத்தான் எனது தந்தையின் சகோதரர் முன்பு நாம் கவுரவமாக வாழவேண்டும் என்பதர்க்காகத்தான். ஒரு முறை பாலா சாரிடம் எனது ஊதிய உயர்வு பற்றி கோரினேன், அவர் "உங்களுக்கு வழங்கும் அளவு ஊதியம் யாருக்கும் இதற்கு முன்னர் வேலையில் சேர்ந்த உடன் வழங்கியது இல்லை, எனவே 1 ஆண்டு காலம் ஊதியர்வு இல்லை என நிறுவனத்தின் உரிமையாளர் ௯றினார்" என்றார். பிறகு "ஏவ்வளவு காலம் இங்கே பணிபுரிவீர்கள்" என வினாவினார். நான் "இன்னும் 3 மாத காலம் ஆன பிறகு வேறு ஒரு வேலைக்கு முயற்ச்சிப்பேன்" என்றேன்.

நண்பர் கணேஷ் பெங்களூர் வந்தார் வேலை தேடுவதர்க்காக, நீண்ட வருடங்களுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் இனைந்தோம். சந்தோஷம் எங்களை அனைத்தது. நானும் நண்பர் கணேஷ்ம் மிகவும் ஜாலியான நண்பர்கள், நாங்கள் ஒருவரை ஒருவர் கெட்டவார்த்தை சொல்லியே அழைத்துக்கொள்வோம்; எங்கள் பேச்சில் 90 விழுக்காடு கெட்டவார்த்தைகளே அதிகம் இருக்கும். எனது பள்ளி நண்பர் சதீஷ்க்கு பிறகு இவரிடமே அதிக நட்ப்பு வைத்து இருந்தேன்.

இரண்டு மாதம் கழித்து நான் வேலை தேட ஆரம்பித்தேன், எனது அதிஷ்டம் சரியாக 4-வது மாதத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் பால சாரிடம் இது பற்றி ௯றினேன், அவர் "நீங்கள் வேலை தேடுவதை, சற்று முன்னரே தெரியபடுத்தி இருக்கலாமே, இருப்பினும் வாழ்த்துக்கள்" என்றார்.

நங்கள் அனைவரும் சந்தோஷமாய் திருந்தோம், இது நீன்ட நாள் நீடிக்கவில்லை. நான் ஒருபுறமும் கணேஷ், செல்வா மற்றும் ஜகதீஷ் ஒரு புறமும் பிரிந்தோம். பங்காளி ராஜெஷ் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்தான், மற்றவர்களை அழைத்து கொண்டு வெளியே செல்வது, உணவு விடுதிக்கு செல்வது என இருந்தான், அவன் அழைக்கும் இடத்திற்கு நான் செல்ல மாட்டேன் என தெரிந்தும் என்னை வேண்டும் என்றே அழைப்பன். நான் சிறிது சிறிதாக நண்பர்களை விட்டு பிரிந்தேன், ஒரு நாள் நான் எனது நண்பரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நண்பர் ஒருவர் தங்க இடம் வேண்டும் என கேட்டேன். இதை பக்கத்து வீட்டு பெண் கேட்டுவிடாள் போலும்.

ஒரு நாள் நான் அறையில் தூங்கி கொண்டு இருந்த பொழுது, செல்வாவும், கணேஷ்-ம் மாடிப்படி அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். நான் சிரிது நேரத்தில் விழித்தேன், நான் விழித்து எழுந்த பொழுது அவர்களிடத்தில் பக்கத்து வீட்டு பெண் அவர்களிடம் சென்று 'காளி அண்ணா வீட்டை விட்டு வெளியேற போகிறாரா, அவரது நண்பரிடம் தொலைபேசியில் ௯றிக்கொண்டு இருந்தார்' என்றாள் , அதற்கு நண்பர்கள் "யார் இவனது கையை பிடித்து இழுத்தது தங்க சொல்லி" என்றனர் இவற்றை நான் கேட்க்க நேர்ந்தது. நான் கொபமும், வறுத்தமும் அடைந்து வேறு இடம் தேட ஆரம்பித்தேன், அந்த வாரம் ஞாயிற்று கிழமை காலையில் நான் விடுதி பார்க்க சென்று எதுவும் கிடைக்காமல் மதியம் திரும்பினேன் (3 விடுதி பார்த்தேன், 1 மிகவும் தொலைவு, 2 இடம் சரில்லாமல் இருந்தது, 3 பதுகாப்பு இல்லாமல் இருந்தது). அன்று மதியம் பங்காளி ராஜேஷ் வந்தார் எங்கள் அறை நார்க்காளியில் அமர்ந்து காதை கொடைந்தவாரே என்னை பார்த்து 'என்ன இடம் கிடைத்ததா எப்பொழுது காலி செய்யப்போகிறாய்" என்றான் ஒரு வில்லத்தனமாக, மற்றவர்கள் பார்த்தால் இது இயல்பாய் கேட்டது போன்று இருக்க வேண்டும் என்பது போன்று. என்னால் கோபம் தாளாமல், உடனே இன்னும் 3 மணி நேரம் கொடு அறையை காலி செய்து தருகிறேன் என்று கோபமுடன் ௯றி விட்டு, கடைசியாக பார்த்த பாதுகாப்பற்ற அறை மேளாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் அந்த அறையில் தங்கி கொள்கிறேன் என்றேன். காரணம் முதலாவதாக அவன் என்னிடம் கேட்ட அந்த கேள்வி, இரண்டவது நமது பொருட்களை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதனால். நண்பர் துளசி அங்கே நன்பர்களை பார்க்க வந்தவர் எனக்கு உதவினார். நான் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். நண்பர் கணேஷ் சிறிது கண்கலங்கினார். நான் அவரை பார்க்க முடியாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிலம்பினேன்.

நான் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை, 13 வருடத்திர்க்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த பொழுது நண்பன் சதீஷ் பிரிவை தாங்காமல் அழுதேன், பிறகு இப்பொழுது; என்னால் அழுகையை கட்டு படுத்த முடியாமல் குளியல் அறை சென்று அழுதேன். என் அழுகைக்கு காரணம் எனக்கு தெரியவில்லை. பிறகு அங்கே இருக்க முடியாமல் எனது உறவினர்கள் இருக்கும் இடத்தின் அருகே ஒரு அறை பிடித்தேன்.

7 நாட்களுக்கு பிறகு நண்பர் விஜயபாபு அங்கே வந்தார். அப்பொழுது நான் கணேஷ்யை தொடர்பு கொண்டு "நான் சாமி கும்பிடும் பொருட்க்களை மறந்துவிட்டேன், அதை நண்பர் விஜயபாபுவிடம் கொடுக்கும் படி கேட்டேன்". நான் விஜயபாபு அழைத்துவர சென்றபொழுது அதை பெற்றேன். நான் எனது அறை திரும்பிய பிறகு, அந்த பையை பார்த்தேன், அதில் பூஜை பொருட்களும், ஒரு சில குப்பைகளும் இருந்தன (ஊதுபத்தி சாம்பல், ஊதுபத்தி தீர்ந்த காகித பை). நான் கோபம் கொண்டேன் நாம் என்ன தவறு செய்தோம் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என அறிய அவர்களை தொடைபு கொண்டு "என்னை பிடிக்க வில்லை என்றால் அப்பொழுதே என்னிடம் தெரிவித்து இருக்கலாம்" என்று ௯றிவிட்டேன். அதன் பிறகு இன்று வரை அவர்களை நான் சந்திக்கவில்லை. நான் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்க்க தயாராக இருக்கிறேன்; மன்னிப்பும் கேட்க்கிறேன்; காரணம் பாலசெந்தில் சொன்னது போல் இனிமேல் நாம் கல்லுரியில் படித்து நண்பர்களை சேர்ப்பது முடியாத ஒன்று இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழ்வோம்.

No comments: