Wednesday, June 6, 2007

வேலை தேடும்பணி

முதுகலை மென்பொருள் வல்லுனர் என பட்டம் பெற்றபின். ஆறு மாதம் எனது சொந்த ஊரில் பொழுது போக்கி கொண்டுயிருந்தேன். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து கோவில் செல்வேன், பிறகு எனது நண்பர் ஒருவரின் கடையில் சென்று செய்திதாள் படிப்பேன், அவர் எனக்காக கொட்டைவடிகட்டி (காபி), வடை வாங்கிவருவார்.

சரண்யா சிமென்ட் எங்களின் மன்றம், இங்கும் எனக்கு நண்பர்கள் அதிகம். மனோகர், பிரபாகர், பாலசந்தர், நம்பி, சுரேஷ், பாஷ்கர், பாண்டு, சரவணன், தனபால், ராஜேஷ். நாங்கள் 10 பேர், எங்களுக்கு பயமே கிடையாது, எதிர்காலத்தை பற்றிய கவலையும் கிடையாது. இன்றும் எங்களின் சந்திப்பு தொடருகிறது.

பிறகு துபாய் சென்றேன், என்னால் அங்கு இருக்க முடியாததால் திரும்பினேன். அங்கேயும் எனக்கு நண்பர்கள் சேர்ந்தனர். சந்த்ரன் (டான் / பார்ட்னர்), பழனி, ராஜாஜி, செல்வம், மணி, குமார் (குரு). சந்த்ரன் மிகவும் அண்பானவர், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர். என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்களில் இவரும் ஒருவர்.

இந்தியா திரும்பியதும், பழையபடி கோவில், நண்பரின் கடைக்கு செல்வது இறவு வீடு திரும்புவது என இருந்தேன்.

இப்படியாக 4 மாதம் சென்றது, பொருப்பில்லாமல் ஊர் சுற்றினேன். 22 வருடம் பிறகு எனது தந்தை என்னை பற்றியும் எனது எதிர்காலம் பற்றியும் கவலை கொண்டார். அது என்னை மிகவும் பாதித்தது. உடனே சென்னையில் இருக்கும் நண்பர் மகெஷ்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்குவதற்கு மட்டும் இடம் அமைத்து தருமாரு கேட்டேன், அவரும் அனுமதித்தார். ஏதோ ஒரு தைரியத்தில் சென்னை சென்றேன். கையில் இருப்பதோ 2500 ரூபாய். எனது பெற்றேரிடம் பண உதவி நாடவில்லை ஏனெனில் ஒரு வரட்டு கவுரவம், நான் வைத்து இருக்கும் பணமும் அவரிடத்தில் இருந்துதான் வந்தது என்பது அப்பொழுது என்னால் அறிந்து கொள்ளமுடியவில்லை, அறிந்து கொள்ளமுடியவில்லை என்று சொல்வதை விட ஏற்று கொள்ளமுடியவில்லை.

அதில் அறை வாடகை 800 ரூபாய் கழிந்தது. தினமும் எனது கோப்பை (பைல்) எடுத்து 2 இட்லி உண்டு வேலை தேடுவேன், ஏனெனில் மீதம் உள்ள பனத்தில் 2 மாதம் வாழவேண்டுமே. அப்பொழுதுதான் வறுமயின் நிறம் சிகப்பு படம் நினைவில் வந்தது. நான் ஒன்றும் கதானாயகனும் இல்லை, அவ்வாறு கடினப்படவும் இல்லை; எல்லம் ஒரு நினைவுதான். மதிய உணவாக 10 ரூபாய் மட்டுமே செலவு செய்வேன். இரவு நண்பர்கள் எனக்கு உதவுவர், அதிலும் சுந்தர் அதிக முறை உதவியவர். "உப்பிட்டவரை உள்ளளவு நினை" என்பர், நான் இன்றுவரை அவ்வாறு நடக்கிறேன். இப்பொழுதும் நான் நல்லவன், நன்றி மறவாதவன் என்று தெறிய படுத்த அல்ல. சென்னையிலும் எனக்கு நண்பர்கள் கிடைத்தனர். பாலசெந்தில்வேலன், உமாசங்கர், ஷரி, ரகு, பெருமாள், தேவேந்திரகுமார் (சுந்தர் சகோதரர்), கார்த்தி (தேவேந்திரகுமார் நண்பர்) மற்றும் பலர். எங்களை வழினடத்தும் ஆசானாக கணபதி, பிரபாகர். ஒன்றறை மாதம் சென்றது, யோகேஷ் ராம்கோவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது வேலை பிரமிட்-ல் காலியாக இருந்தது. அந்த வேலைக்கு என்னை சிபாரிசு செய்ய கணபதி அண்ணன் விரும்ப வில்லை. காரணம் அந்த நேரத்தில் நான் அதிகமாக கெட்டவார்த்தை பேசுவேன்; நண்பர்களிடம் பேசும்போது எனக்கு பழக்கம் ஆகிவிட்டதால் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை, எங்கே நான் வேலை செய்யும் இடத்திலும் அவ்வாறே செய்து விடுவேனோ என்று பயம் அவருக்கு. இது அனைவருக்கும் வறும் வரவேன்டிய கோபம் / பயம். காரணம் வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் தவறு நேர்ந்தால் வேலைக்கு சேர்த்தவரே பொறுப்பனவர் ஆவார். இதை கேட்டு முதலில் கோபம் கொண்டேன், பிறகு அது தவறு என்பதை உனர்ந்து என்னை மாற்றிகொல்ல முயன்றேன்.

எனக்கு சிபாரிசு செய்வது தவறு, அவர் அவர்களே வேலை தேடவேண்டும்; அப்பொழுதுதான் வேலை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்கு தெரியும் என்று பிரபாகர் ௯றியதாக நான் கேள்விபட்டேன். அதையும் மீறி கணபதி அண்ணன் என்னை அந்த வேலைக்கு சிபாரிசு செய்தார்.

பிரமிட்; நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்த தொழிலகம். வேலை செய்யும் இடம் ஆட்டொலக் என்னும் ஒரு தனியார் தொழிலகம். நான்கு சக்கர வண்டிகளுக்கு உதிரிபாகம் உற்பத்தி செய்யும் இடம். அங்கு நான் எனது பனியை தொடங்கினேன். அன்றுமுதல் கணபதி அண்ணன் எனது வழ்வின் முன்னோடியானார்.

பாலசெந்தில் :-
-----------------
நாங்கள் என்றாவது ஒரு நாள் உற்ச்சாக பானம் அறுந்த செல்வேம். ஒரு முறை பாலசெந்தில் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னான் "இது வரை நாம் சேர்த்தது தான் நண்பர்கள், இனியும் பள்ளிக்கோ, கல்லூரிகோ சென்று நண்பர்கள் சேர்க்க போவது இல்லை; எனவே இருக்கும் நண்பர்களுடன் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வோம்" என்றான். அது எனதை மிகவும் பாதித்தது.

சுந்தர்:-
---------
நாங்கள் இருவரும் நல்ல விசயத்திற்க்கு இனைகிறோமோ இல்லையோ, மற்றவர்களை கிண்டல், கேளி செய்ய, மற்றவர்கள் கெட்டுபோக இனைவோம், இதில் அடிக்கடி எங்களிடம் சிக்குவது யோகேஷ். யோகேஷ் சுந்தர் சொல்லுவதை எப்பொழுதும் மறுக்காமல் செய்வான். எங்கள் இடையே எப்பொழுதாவது சிறு சண்டை நேரும். இருவரும் 1 மணிநேரம் பேசாமல் இருப்போம், பிறகு நான் பாலசெந்தில் சொன்னது நினைவில் கொண்டு அவனிடம் பேசசெல்வேன், அதற்குள் அவனே என்னிடம் வந்து பெசுவான். இதுவே அவனிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

யோகேஷ்:-
----------
நண்பர்களை அறவனைத்து செல்வதில் வள்ளவன். நண்பர்களுக்குள் எப்படி விட்டுக்கொடுத்து செல்வது என்பது இவனிடம் இருந்தே நான் பலமுறை கற்றது உண்டு. அனைவரிடமும் பாசம் மிக்கவன். நான் பல முறை அவனிடம் செய்யும் தவறுக்கு அவனே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்பான். இந்த மின்னனு வலை மூலியமக அவனிடம் நான் இதுவறை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

மகேஷ்:-
---------
உலகில் திசையை அறிய திசை காட்டி என்று ஒன்று உண்டு. பல நண்பர்களுக்கு இவனே திசை காட்டி, என்னையும் சேர்த்துதான். எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இருவரும் விட்டு கொடுத்து செல்லமாட்டோம். இவனிடம் நான் மன்னிப்பு கெட்க்க போவது இல்லை, ஏனெனில் நண்பர்களிடயே சிறு சண்டை இல்லை என்றால் ஒரு சுவாரசியம் இருக்காது. எனவே "டேய் மகேஷ் என்னை மன்னிக்காதே டா".

என்னடா இவன் அனைவிரடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறான் என்று என்னுவீர்கள்; அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்ப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள் நான் எவ்வளவு பெறிய கல்நென்ஞம் படைத்தவன் என்றும், அயோக்கியன் என்றும்.

உமாசங்கர்:-
------------
பெற்றோர் மீது பிள்ளைகள் எந்த அளவு பாசம் காட்ட வேண்டும் என்பதை இவனிடம் இருந்தே கற்க்கவேண்டும் (சுந்தர் இந்தை படித்தால் கன்டிப்பாக என்னை திட்டுவான், இல்லையெனில் அவனை நான் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே கொள்ளலாம்). உமா எந்த நண்பரையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டான். இதில் பெண் நண்பர்களுக்கு முக்கியத்துவம் அதிகம் (என்னை திட்டதே டா!!!).

தேவேந்திரகுமார்:-
-----------------
இவரிடம் எனக்கு அவ்வாறாக நட்ப்பு இல்லை, எனினும் அவரை பற்றி நான் அரிந்ததை எழுதுகிறேன்.

மிகவும் திறமைசாலி, நண்பர்களுக்காக எந்த நேரத்திலும் எந்த உதவியும், எதுவும் செய்யக்௯டியவர். திறமைசாலிகலை மதிப்பவர், மதிக்க தெரிந்தவர். இதுவே நான் இருந்து இவரிடம் கற்றது.

கார்த்தி:-
---------
நம்முள் திறமைகலை எப்படி வளர்ப்பது என்பது இவரிடம் இருந்தே கற்க்கவேண்டும். தன்னுள் இருக்கும் திறமைகலை தினமும் மெருகு ஏற்ற ௯டியவர், தெரிந்தவர். திறமை இல்லை என்று ௯றுபவர்கள் இவரை பார்த்து தன்னை மாற்றிக்கொள்ளமுடியும்.

ஈஷ்வர் பிரசாத்:-
----------------
எங்கள் அணியில் தன்னிகரற்ற திறமைசாலி. வேலையில் எவ்வாரு ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பது இவரை பர்த்த பின்பே கற்றேன், ஆனால் கடைபிடிக்க முடியவில்லை. இவரை பார்த்து பலர் வியந்ததுண்டு. சிறந்த நண்பர்.

பிரபு:-
------
கல்லூரி நாட்க்களில் இனைந்து, வேலை தேடும் வரை நாங்கள் பிரியவில்லை, எனது வாழ்வில் குற்ப்பிடும்படியான நண்பர்களில் இவரும் ஒருவர். எனது பிறந்த நாளும் இவரின் பிறந்த நாளும் ஒரே தேதி, மாதம், வருடம். இவை எல்லாம் ஒரே மாதிரியாய் இருந்தாலும் என்னை போன்று இல்லை, மிகவும் கன்னியமான நண்பர்.

கணபதி அண்ணன்:-
-------------------
என்னை முதலில் வேலைக்கு சிபாரிசு செய்தவர், சிபாரிசு என்பதை விட, எனக்கு வேலை வாங்கி கொடுத்தவர். எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் அக்கறை கொண்டவர்; எங்களின் வழிகாட்டி. என் மீதும் தான், இதை நான் ௯ற காரணம்; எங்கள் சென்னை நண்பர்கள் வட்டாரத்தில் நான் சற்று மதிப்பு குறைந்தவன். இது மற்றவர் ௯றியது இல்லை, நானே என்னை ௯றி கொள்வது, காரணம் எனது பழக்க வழக்கம் அப்படி. இவரையும் நாங்கள் ஏமாற்றுவது உண்டு, புகைபிடிப்பது, உற்ச்சாகபானம் அருந்துவது, சீட்டு விளையடுவது போன்றவற்றிர்க்காக. இவரை நாங்கள் ஏமாற்றினால் மேலே ௯றியதில் ஒன்றே காரணம். எனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்தவர். எனது வாழ்வின் வடக்குநோக்கி, வடக்குநோக்கியென்றல் மலையாலத்தில் திசை காட்டும் கருவி என்று பொருள்.

பிரபாகர் அண்ணன்:-
-------------------
எங்கள் அனியின் தலைமைவாதி தீவிரவாதி. மிகவும் ஜாலியான நண்பர். இவர் ௯றுவதை நாங்கள் கேட்கவேண்டும் என்று என்னம் உடையவர். இவர் பேச்சு, கனிப்பு மிகவும் சரியாக இருக்கும். இதை மீறி பலமுறை நான் கையை சுட்டுக்கொண்டது உண்டு. இது நான் இவரை 'தாஜா' பன்னுவதற்க்காக சொல்லவில்லை. இவரை நண்கு அறிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். இவரிடம் நான் சிலமுறை இல்லை பல முறை அடிவாங்கியது உண்டு. அந்த நிமிடத்தில் கோபம் கொண்டலும் நம்மிடம் இருக்கும் உரிமையில் செய்வதை கொண்டு மகிழ்ச்சி கொள்வதுண்டு.

ஷரி:-
------
சென்னையில் நான் சந்தித்தது முதல் இன்று வரை என்னிடம் (என்னக்கும்) மரியதையுடன் அழைப்பவர். அமைதியான நண்பர்.

பெருமாள்:-
-----------
கணக்கு வழக்குகலை வரையரை செய்யும் பட்டம் பெற்றவர். படிக்கும் நேரம் இது விளையாடும் நேரம் இது என்று வரையருத்து வாழ்பவர். மற்ற பெற்றோர்களும் தன் பிள்ளைகள் இவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாய் திகழ்பவர். இவரை போன்ற ஒருவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.


தோள் கொடுக்க, சண்டை போட, எந்த நேரத்திலும் பொங்கல் போட, அணைக்க, அடிக்க, கோவிச்சுக்க அப்பறம் பழம் விட்டுக்க எனக்கு இருக்கும் நண்பர்கள் கணபதி அண்ணன், பிராபாகர் அண்ணன், விஜயபாபு, சுந்தர், யோகேஷ், மகெஷ், உமா, ஷரி, பிரபு, தனபால், ரகு, துளசி, கணேஷ், செல்வா, பாலா, சரவணன், வெங்கட்...

No comments: