பிறகு மேல் படிப்பிற்காக அயல்நாடு செல்லவில்லை, ஏனெனில் 62 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேற்ச்சி பெற்றேன். இதை வைத்து ஆகாயவிமானத்தில் பயணத்திற்கு ௯ட இடம் கிடைக்காது;அப்புறம் எங்கே அயல்நாடு. என்னிடம் உள்ளூர் செலவாணிக்கே வக்கில்லை ;அப்புறம் எங்கே அன்னிய செலாவானி என்பது போன்று அயிற்று.
முதுகலை மென்பொருள் வல்லுனர் படிப்பிற்க்காக, பாரதிதாசன் பல்கலை கழகத்தில் சேர்ந்தேன். அங்கே மீண்டும் நண்பர்கள் சேர்ந்தோம். முறையே பிரபு, மகேஷ், சுந்தர், யோகேஷ், வேனீஷ், ஜஷ்டின், ஜேசப், கோபிகன்னன் (ஆசான்) மற்றும் பலர். எனது இளநிலை படிப்பின் போது ஒரு நண்பரை சுட்டி காட்ட மறந்தேன் அவர் வெங்கட் இன்னும் உள்ளனர் (மற்றவர்கள் மண்ணிக்கவும்). மகேஷ் அனைவிரிடமும் நட்புடன் பழகுபவர், நான் அவரிடம் சரியாக பழகவில்லை இன்றுவறை (நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால், இதன் மூலயமாக அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்). சுந்தர் மிகவும் கலகலப்பான நண்பர் அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. யோகேஷ்; நண்பர்களிடன் எவ்வாறு விட்டு கொடுத்து செல்வது என்று இவரிடமே கற்றுக்கொள்ளவேண்டும்.
இங்கும் எனது 'பிட்' அடிக்கும் செயலை கையாண்டேன். ஜமால்மொகமது கல்லூரியில் 'பிட்' அடிப்பது என்பது மிகவும் கடினம். 'டிசு'(tissue) என்றொரு காகிதம் பிரபலம் ஆகியது. நான் பயிலும் காலத்தில், இது வியர்வையை துடைப்பதற்க்காக அறிமுகப்படுத்தினர். நான் அதில் எழுதி 'பிட்' அடிக்க ஆரம்பித்தேன். இங்கு 'டிசு' பயன் படுத்தினேன், என்னை யாரும் கண்டு கொள்ளாததால் மார்தட்டி சென்று கொண்டுயிருந்தேன், ஒருமுறை ஒரு கண்காணிப்பளர் என்னை பார்த்துவிட்டார். எனக்கு பயம் தொற்றியது, கை மற்றும் கால் நடுக்கம் கொண்டது, அவர் என்னை நேக்கி நகர்ந்து வந்து கொண்டுயிருந்தார். என்ன செய்வது என்று என்னியபொழுது ஒரு யோசனை தோன்றியது, உடனே 'டிசு' காகிதத்தில் மூக்கை சிந்திவைத்து விட்டேன். அதை அவரால் தொடமுடியாமல் முறைத்து பார்த்துவிட்டு சென்றுவிட்டார் (இதுவே நான் 'டிசு' காகிதத்தை கையாளுவதற்க்கு காரணம், மற்றவர்களுக்கும் இதையையே நான் அறிவுருத்துகிறேன், யாரும் திட்டவேண்டாம்).
இறுதியாக மென்பொருளில் முதுகலை பட்டம் பெற்றேன். இம்முறையும் நான் பட்டம் பெருவதற்கு விஜயபாபு, செல்வாவே காரணம். பிறகு நாங்கள் பிரியும் நேரம் நெருங்கியது, எங்களது பிரிவு மிகவும் வருத்தத்தில் கொண்டுசென்றது.
நண்பர்கள் :-
தயாலன், தனசேகர், கரிகரசுதன், காமராஜ், கோவிந்தன் மற்றவர்கள் மன்னிக்கவும் என்னால் நினைவில் கொள்ளமுடியவில்லை, விரைவில் அனைவரையும் இணைப்பேன்.
Monday, June 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment